வாழ்க்கை..!!

ஒற்றை கயிறுக்கு
ஏங்கிடும் கழுத்தாக
காத்துக் கிடக்கிறது
அவளது தேகம்..!!

மணாளன் வருவான்
மாலை சூடுவான்
மங்கை முகம்
மலருமே..!!

நெஞ்சம் பரீட்சித்திடும்
நிகழ்வை ஏற்றிடுவாளே
மாலையிட்டவன் அவளைத்
தாங்க அவளும்
ஏந்திடுவாளே குடும்பத்தை..!!

சிறுக சிறுக வாழ்க்கை உள்ளே நுழைந்து
இன்பத்தையும் துன்பத்தையும்
அனுசரித்து இருவர்
ஒன்றாய் வாழ்ந்து விடுவோமே..!!

ப.பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (10-May-23, 9:37 am)
பார்வை : 41

மேலே