விதை
விதை
[][][][][][]
வாழ நினைத்தால்
வாழ்ந்திடலாம் முயற்சியால்/
அனைத்தும் நிறைந்த
அன்னை பூமியில் /
உணர்த்தும் விதத்தில்
உயிர்ப் பெருகிறது /
பூட்டின் ஈரத்தில்
பயிர்கள் முளைப்பது /
கடலும் கையளவு
கடமையுடன் உழைத்தால் /
வானமும் தொடுந்தூரம்
வெற்றியின் விளிம்பில்/
முயன்றால் இரும்பையும்
மண்ணாக்கி உரமாக்கி/
பயிர்கள் முளைத்து
பாடத்தைக் கற்பிக்கிறது/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்