மழலையின் சேட்டை

மழலையின் சேட்டை
$$$$$$$$$$$$$$$$$$

மழலையின் சேட்டை
மயக்கிடும் ஈன்றோரை

வட்டில் சோற்றை
வாரி பருகிட

துள்ளிடும் குறும்பில்
அள்ளியே விதைத்து

சிட்டுக் குருவியாக
சிறுகையால் சேகரித்து

வாயிக்குள் வைத்தாலும்
வந்துவிடும் கையோடு

முயற்சி எடுப்பதும்
பயிற்சி கொள்ளுவதையும்

பார்த்து மகிழும்
பேரின்பம் எல்லையற்றது

தேடிடும் நிம்மதியை
தந்திடும் நம் குழந்தை

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (9-Jul-23, 5:54 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : MAZHALAIYIN settai
பார்வை : 68

மேலே