இயற்கையிடம் வம்பு

இயற்கையிடம் வம்பு

கடைசியில்
தோற்றுத்தான்
போகிறான் மனிதன்
இயற்கையிடம்

ஏமாந்தது
எதிர்த்து எதுவும்
செய்வதில்லை
இந்த மண்ணும்
மரமும்

எண்ணித்தான்
ஏகமாய்
தொல்லை கொடுக்கிறான்

ஏதோ ஒரு நாள்
மனிதர்களின் பிறப்பையே
முடித்து விட்டு
போய் விடுகிறது
அரை நொடியில்..!
இயற்கை என்னும் பேரழகு

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Aug-23, 3:49 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : iyarkaiyidam vambu
பார்வை : 100

மேலே