காதல் சுகமானது
காதல் சுகமானது !!!
❣️❣️❣️❣️❣️❣️❣️
கருவிலே உன்றனைக்
கண்டனென் துணையென /
உருவான பின்னுமே
உயிரிலே கலந்தோமே /
இளமையில் சிற்றில்லை
இடித்துமே சிதைத்தனே /
உளமெலாம் மகிழவே
ஒன்றாகத் திரிந்தொமே /
பள்ளியில் பாடங்கள்
படிப்பதில் போட்டியும் /
துள்ளி விளையாடலில்
துடுக்குகள் காட்டினோம் /
கல்லூரி நாட்களில்
களித்ததும் மகிழ்ந்ததும் /
வல்லவன் என்னையே
வளைத்ததும் மறக்குமோ /
காதல் சுகமானது
காலங்கள் மாறினும் /
தீதெலாம் நீங்குமே
தேவதை உறவிலே !!
-யாதுமறியான்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
