இன்சுவை வாழ்வினை யினிதுற நல்குவயோ - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(விளம் 3 / காய்)
மின்மினி போலவே மினுக்கிடும் வாழ்வுதனிற்
பொன்னணி வேண்டிலேன்; போற்றிடுந் துணையெனவே
முன்னுற வந்தெனை முழுமனக் காதலுடன்
இன்சுவை வாழ்வினை யினிதுற நல்குவயோ!
- வ.க.கன்னியப்பன்
சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!