செந்தளிர் எழில் இளந்தளிரே
செந்தளிர் எழில் இளந்தளிரே
××××××××××××××××××××××××××
செந்தளிர் எழில்
இளந்தளிர் ரோசவே
மாந்தளிர் புன்னகை
மந்திரத்தால் மயக்கியவளே
சிமிட்டும் கண்ணும்
சிலவார்த்தை பேசுதே
நிமித்தம் புரியாது
நிமிடம் திகைத்தே
அகராதியில் தேடினேன்
அசைவின் பொருள்
அகப்படவில்லை ஆயினும்
அறிந்தேன் மனக்கண்ணாலே
காலல் கோலமிடும்
கபடமில்லா நணத்தால்
நலமான தூதுவிட்டாய்
நான் காதலிக்கிறேனென்றே
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்