அலைபாயும் கூந்தலோ ஆற்றுப் பெருக்கு

சிலைசெய்யும் சிற்பி செதுக்கா சிலைநீ
அலைபாயும் கூந்தலோ ஆற்றுப் பெருக்கு
உலைச்சோறும் உன்விரலால் உள்ளே இனிக்கும்
கலைவிரலால் என்னைத் தொடு

எழுதியவர் : கவின் சாரலன் (9-Nov-23, 8:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே