குலோத்துங்க சோழன் கோவை - நூல் -முதலாவது - களவியல்

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
முதலாவது: - களவியல்.

முதலாவது-- கைக்கிளை.

அஃதாவது; தலைவன் மாட்டாவது தலைவி மாட்டாவது நிகழும் ஒருதலைக் காமம்; அவற்றுளிது தலைவன் பாற்படும் ஒருதலைக் காமமாய்க் காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என நான்கு வகைப்படும்; அவை வருமாறு:-

காட்சி.

ஐயம்.

துணிவு

குறிப்பறிதல்.

(இ-ள்) தெளிந்த தலைமகன் தலைவியின் வேட்கை அவள் பார்வையாற் றன்னிடத்துள்ளது என்றறிதலைக் கூறுதல்.

கட்டளைக் கலித்துறை

பொங்கோத ஞாலத் தறிவொன் றிலாத புரவலர்தம்
வெங்கோன் மையுமந்த வெங்கோன்மை யாவும் விலக்கியென்று
நங்கோ னுறந்தைக் குலோத்துங்க சோழ னடாத்துமொரு
செங்கோன் மையுமொத்த வாலிரு நோக்குமிச் சேயிழைக்கே! 4

1-கைக்கிளை - முற்றிற்று.

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (16-Dec-23, 10:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே