மல்லிகையை உரசிடும் மாலைக் காற்று
மல்லிகையை உரசிடும் மாலைக் காற்று
+++++++++++++++++++++++++++++++++
அந்தி மாலையில் மயங்கி மலர்ந்திடும் /
அடுக்கு மல்லிகையை உரசிடும் தென்றலாக/
கருநிற விழியின் பார்வையால் தழுவி/
கடலில் மறையும் சூரியனின் தீப்பிழம்பாக/
அன்பின் எழுச்சியால் காதல் சூடேற்றி/
மலர்களில் கலந்திட்ட மனமாக உயிரிலும் /
மனதிலும் ஒன்றாக கலந்து இணைந்திடுவோம்/
கடலின் அலையாக மகிழ்வுடன் வாழ்வோம்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்