அவள்
தோகை மயில் பார்த்தேன் அது
ஆட மறந்து ஏனோ நின்றிருந்தது
ஆட மறந்து நின்றாலும் மயில் அழகே
இதோ என்முன்னே என்னவள் என்காதலி
வாய் மூடி மௌனமாய் ஒரு ஞானிபோல்
நிற்கின்றாள்....கண்மூடி ....தாமரை வாய்
திறவாமல் .....மொட்டாய் இருந்தாலும்
தாமரை அழகே....காத்திருப்பேன் நான்
இவள் ஆடி மகிழ தோகை மயிலாய்
மூடிய இவள் கண்ணும் துள்ளும் கயலாய் மாற
என்னுள்ளம் கனிய குளிர்ந்திடவே