ஓட்டை என்றாலே பலவீனம் அல்ல

❗❓❗❓❗❓❗❓❗❓❓

*ஓட்டை என்றாலே!*
*பலவீனமல்ல..*


படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

❗❓❗❓❗❓❗❓❗❓❗

மனிதா !
'ஓட்டை' என்றாலே !
பலவீனம் என்று
நினைத்து விடாதே....!

ஊசியின்
ஓட்டை தான்
'கிழிந்ததை'
மட்டும் அல்ல......
'வெட்டியதையே'
இணைக்கும்
வலிமையைப் பெற்றுள்ளது.....

'சல்லடையின்
ஓட்டை' தான்
பயனற்றதோடு இருக்கும்
ஒன்றை
'பயன்படுமாறு ' பிரிக்கின்றது.....

எரிமலைகளால்
'பூமியில்
ஓட்டை விழுந்த' போதுதான்
உயிர்கோளமாக
திகழ்ந்தது.....

உடலில் இருக்கும்
சிறு சிறு ஓட்டைகள் தான்
மனிதனின்
வேர்வையை வெளியேற்றி
உடலைக்
குளிர்ச்சியாக்குகிறது...

இலையிலும் மரப்பட்டையிலும்
இருக்கும் ஓட்டைகள் தான்
நீராவிப் போக்கின் மூலம்
தாவரங்களை
வாழ வைத்துக்கிறது....

மண்பானையில் இருக்கும்
சிறு சிறு ஓட்டைகள் தான்
மண்பானை நீரை
வெப்பத்திலிருந்து
பாதுகாக்கிறது...

மூங்கிலில்
'ஓட்டை
விழும் பொழுது தான்
அது புல்லாங்குழல் ஆகிறது....

அவ்வளவு ஏன் ?
நம்மிடம் உள்ள
'ஒன்பது ஓட்டை' தான்
நம்மையே
வாழவைத்துக்
கொண்டுள்ளது......

மனிதா !
'ஓட்டை' என்றாலே
பலவீனம் என்று
நினைத்து விடாதே...!

'கவிதை ரசிகன்'

❗❓❗❓❗❓❗❓❗❓❗

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (5-Jun-24, 7:07 pm)
பார்வை : 28

சிறந்த கவிதைகள்

மேலே