தரைக்கு வந்த தாரகையே

தங்கத் தேர் ஏறி வரும் தேவதையே
தரனியிலே உலாவும் தேவதையே
தவம் இருந்து நான் பெற்ற தேவதையே
தமிழ் போற்றும் தேவதையே ..../

மண் ஆளப் பிறந்த தேவதையே
மனம் வாழ்த்தும் தேவதையே
மனிதம் நிறைந்த தேவதையே
மலராய் புன்னகைக்கும் தேவதையே .../

பார் போற்ற நீ வாழ வேண்டுமடி
பார்ப்போர் கண் வியக்க வேண்டுமடி
பாசத்தின் உதயமாக வாழ வேண்டுமடி
பாதை தவறாமல் நடை போடடி ..../

உண்மைக்கு உரம் போடடி
உயிருக்கு மதிப்பளியடி
உணர்வுடன் கதை கூறடி
உணர்ச்சியை உதறித் தள்ளடி ..../

கள்ளம் இல்லாத பேச்சு தேவையடி
கனப்பொழுதும் தொழ வேணுமடி
கண்ணீரை சிந்தாதேயடி
கண்மணியே சிறந்து வாழடி...../

அடக்கம் கொள்ளடி
அடங்காதே ஆணவம் கண்டாளடி
அன்புக்கு அடி பணியடி
அலட்சியம் கொள்வோரை
அழித்து முன்னேறடி .../

எழுதியவர் : ஆர் எஸ் கலா (22-Jun-24, 1:49 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 103

மேலே