காற்றே வீசு

மேகம் மூடிய நிலவு போல்
முந்தானை மூடிய உந்தன் முகம்
காற்றின் அசைவில்
முந்தானை விலகும்
உந்தன் முக தரிசனம் கிடைக்கும்
என்று ஆவலாக இருக்கிறேன்

காற்று வீசவில்லை
காற்றுக்கு என் மீது
என்ன கோவமென்று
எனக்கு தெரியவில்லை

என்னவளே நீ தான்
எந்தன் சுவாச காற்று
என்று காற்றுக்கு
ஏன் புரியவில்லை

காற்று வீசி உந்தன்
திருமுக தரிசனம்
கிடைக்குமென்று
நம்பிக்கையோடு
காத்து நிற்கிறேன்....!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Jul-24, 8:44 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaatre veesu
பார்வை : 61

மேலே