முதுமையின் விளைவு
முதுமையின் விளைவு
வயதானால் வருவது முதுமை
முதுமையினால் வருவது மறதி
மறதியினால் வருவது நினைவில்லாமை
நினைவில்லாமையால் வருவது மனதில் நில்லாமை
மனதில் நில்லாமையால் வருவது அறியாமை
அறியாமையால் வருவது மடமை
மடமையால் வருவது மனஉளைச்சல்
மனஉளைச்சலால் வருவது நிம்மதியில்லாமை
நிம்மதி இல்லாமையால் வருவது தூக்கமின்மை
தூக்கமின்மையால் வருவது களைப்பு
களைப்பினால் வருவது சோர்வு
சோர்வினால் வருவது சலிப்பு
சலிப்பினால் வருவது துன்பம்
துன்பத்தால் வருவது மனப்பாரம்
மனப்பாரத்தால் வருவது துன்பம்
துன்பத்தால் வருவது விரக்தி
விரக்தியால் வருவது வெறுப்பு
வெறுப்பினால் வருவது பிடிப்பின்மை
பிடிப்பின்மையால் வருவது மரணஇச்சை
மரணஇச்சையால் வருவது நிரந்தர தூக்கம்