என் நாடு
மிதமான வெட்பம் ; இதமான குளிர்
உடலை வருடும் மெல்லிய தென்றல்
எங்கும் பச்சை செழிப்பு
வாடாத மலர்கள்
ஓயாமல் இன்னிசைக்கும் பறவைகள்
ரீங்காரமிடும் வண்டுகள் - அதை
கண் சிமிட்டாமல் பார்க்கும் செண்டுகள்
பளிங்கு போன்ற நீராவி - அருகில்
மணக்கும் தேனருவி
பழுத்த பலா கால்களுக்கடியில்
கொளுத்த மா கைகளுக்கருகில்
சுத்தமான பளிங்கு தரை
குளிர்ச்சியான ஓடுகளால் வேயப்பட்ட
அழகிய வீடுகள்
இங்கு வைத்தியர்களும் இல்லை
வைத்தியசாலைகளும் இல்லை
இங்கு வக்கீலும் இல்லை
நீதிமன்றங்களும் இல்லை
இங்கு குற்றங்களும் இல்லை
குற்றவாளிகளும் இல்லை
மழலைகளின் மழலை பேச்சுகளும்
அவர்களின் குதுகலமான சிரிப்பொலியும் மட்டுமே உள்ளது
என் நாடு குற்றங்களை முழுமையாக
கொண்டுள்ள பெரிய மனிதர்களின் நாடு அல்ல
குற்றங்களே அறியாத
கள்ளங்கபடம் இல்லாத
குழந்தைகள் மட்டும் வாழும் நாடு......