!!! மறந்துவிட்டதைபோல் நடிக்க முயற்ச்சிக்கிறேன் !!!
நீ என் மீது
வைத்த அன்பு
உண்மையானதென்றால்
நீ என்னை
நேசித்தது
உண்மையென்றால்
நீ என்னை
காதலித்தது
உண்மையென்றால்
தயவு செய்து
எனக்காக நீ
என்னை
மறந்துவிடு என்கிறாய் !
உள்ளத்தில் ஓவியமாய்
குருதியில் நீரோட்டமாய்
விழியில் கனவுகளாய்
இதயத்தில் துடிப்புகளாய்
மூளையின் சிந்தனையாய் - என்
இயக்கங்களின் உந்துதலாய்
இருந்த உன்னை
மறந்துவிட முடியுமா என்ன...???
வேண்டுமானால் நீ
ஆசைப்படுகிறாய் என்பதற்காக
மறந்துவிட்டதைபோல்
நடிக்க முயற்ச்சிக்கிறேன்....
பூக்கின்ற பூக்களெல்லாம்
பூஜைக்கா போகின்றன?
சில சிலர் கூந்தலுக்கு
சில சிலர் கல்லறைக்கு
சில சில செடியிலேயே
வாடியும் உதிர்ந்துவிடுகின்றன;
அதை போலதான்
என் காதலும்...!!!
(எல்லா காதலும் திருமணத்தில் முடிந்திருந்தால் இங்கு காதலுக்கு வரலாறே இல்லை. உண்மையான காதலுக்கு தோல்வியிலும் சுகமுண்டு. உன் வாழ்க்கையின் கடைசி எல்லையில் வந்து உன் முதல் காதல் உன்னை முத்தமிடும் அப்பொழுது நீ குழந்தையாகி போவாய், காதலியுங்கள் தோல்வியையும் நேசியுங்கள், நீங்கள் தோல்வியடைந்த போதும் உங்கள் காதல் தோற்காமல் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் வாழ்ந்துகொண்டு இருக்கும்.).