கண்ணீர் துளிகள்
கண் தெரியாத அப்பாவுக்கு
கண் மருத்துவரான மகன்
இருந்து என்ன பயன்.....?
கண் கலங்குகிறது நமக்கு - அது
தெரியவில்லையே அவரின் மகனுக்கு......!
பாராட்டி சீராட்டி
படிப்பூட்டி பாசமூட்டி
வளர்த்தவள் மரண படுக்கையிலே
வளர்ந்தவனோ மாடி வீட்டிலே....!
மகனை பாலூட்டி வளர்த்தவள்
மகன் கொடுக்கும் கடைசி
பாலுக்காக ஏங்கி உயிர் விடமுடியாமல் துடித்தாள்......!
உன் அம்மா
இறக்கும் நிலையில்
இருக்கிறாள் -வாடா மகனே
என தந்தை அழைத்ததற்கு
இறந்தபின் கூறுங்கள் வருகிறேன் என்றான்......!
மனைவியை மரண படுக்கையிலும்
மகனின் பாசமில்லாத உள்ளத்தையும்
காண முடியாத கண்களிலும்
கண்டு மனம் உடைந்து
மனைவியிடம் சென்றார்......!
மகன் வரவில்லையா- என
கேட்டவளிடம் கண்ணீரை மட்டும்
பதிலாகக் கூறினார்.....!
மகன் வரமாட்டானா-என
ஏங்கியவளைப் பார்க்க
எமன் மட்டுமே வந்தான்....!
காலையில் இறந்த தாயைப் பார்க்க
மாலையில் வந்தான்
மாலைக் கூட வாங்காமல்......!
கண்ணில் ஒரு துளி
கண்ணீர் கூட எட்டிப்பார்க்கவில்லை...!
தந்தையின் கண்களில்
கடலாக பெருகிய கண்ணீர் துளிகள்
அவன் காதுகளில் மௌனமாக கூறியது
உனக்கும் ஒரு மகன் இருக்கிறன் மறந்து விடாதே என்று.....!