இருள் சூழ்ந்தது!
இருள் சூழ்ந்தது ஜகம் - நெஞ்சில்
ஒளி எழுந்தது நிஜம்!
அற்ப மாயைகள் வாழ வந்தார்கள்..
கலி யுகம் தனை ஆள வந்தார்கள்..
ஆசை நஞ்சு புகுந்தது அவருள் - பொம்மை ஆகிவிட்டார்
ஆட்டி வைத்து பேராசை யன்று - மண்ணில் விழுந்தானிவன்!
கருவறை இருளை வெறுத்து குதித்தான் -
உலகம் இருளி லென்று புரியாமலே..
ஆயிரம் சாதிக்க பிறந்து வந்தான் - ஆசை இவனுள்ளும்
கபடமற்ற நெஞ்சம் கண்டது தோழ்வி பழி ஏமாற்றம்..
நம்பி ஏமார்ந்தன் - உதவி பழியானான்
முயன்று தோழ்வி கண்டான்..
உறவு உதறியது - நெஞ்சம் சிதறியது
இருளில் பூட்டப்பட்டான்..
இருள் சூழ்ந்தது ஜகம் - பேராசை
இவ்வுலகு சூழ்ந்தது நிஜம்!
களைகள் வேரூன்றி வளர்ந்தே வளர்ந்தன.,
வெறுமை இவனது வாழ்வு சூழ்ந்தது.,
வாழ்வே வெறுப்பானதோ சதியின் சூழ்ச்சி யானதோ?
கலியுக மானதோ அதனில் குருதிப்புனல் பாய்ந்ததோ?
அன்று வெறுமைமது இவன் கண்கள் கண்டதெல்லாம்
இன்று நெஞ்சில் ஒளி எழுந்தது நிஜம்!
இருள் சூழ்ந்தது ஜகம் - நெஞ்சில்
ஒளி எழுந்தது நிஜம்!
அச்சம் தனை தீயிலிட்டது மனம்
வீழ்வு தனை வீசிஎறிந்தது மனம்
உடற்புகுந்த உயிர் வாழத் துடித்தது
மனிதம் அதனை நாடித் துடித்தது
அற்ப மனிதர்களை வெறுத்தெழுந்தது மனம்
இன்பம் தனைனாடித் துடித்தது அகம்
விழுத்து எழுந்த திவ னகம்
நெஞ்சில் ஒளி எழுந்தது நிஜம்!
பொறுத்திருந்த மனம் புரிந்துகொண்ட அகம்
எதிர்க்க துணிந்து விட்டான்!
இருள் சூழ்ந்தது ஜகம் - நெஞ்சில்
ஒளி எழுந்தது நிஜம்!