பஞ்ச பூத கவிதைகள் - சக்தி 3
இப்போது 3 ம சக்தி யாகிய நீரை பற்றி ஒரு கவிதை !
தண்ணீர் ! தாய் !
பிறப்பு முதல் இறப்பு வரை பிரியாத பெருங்கருணை !
தாகங்கள் தீர்த்தே தவிப்புகள் யாவும் அழிக்கும் யோகம் !
தண்ணீர் ! சொத்து !
பூமியின் புதையல்களில் ஊறி நிற்கும் ஊற்றே முதல் புதையல் !
நம்மிடை வாழ தன்னிலை தாழ்த்தி மலை உச்சியில் இருந்து மண்ணுக்கு வரும் தியாகம் !
ஆறுகளாய் ஓடி சென்றே அத்தனை அழுக்கையும் கரைத்து விடும் கருணை !
நடந்து செல்லும் வழியில் இடம் பிடித்து போனால் ஏரியாய் குளமாய் குட்டையாய் தங்கி நின்று தயை புரியும் அன்பு !
கால்கள் நீட்டி கண்கள் பூட்டி விரிந்திருக்கும் பிரம்மாண்டமாய் கடல் !
தண்ணீர் தாயமுதம் !
விண்ணுக்கும் மண்ணுக்கும் மேகமாய்
வேகமாய் தினம் பயணம் !
தண்ணீர் உயிர் நீர் !
செடிகளின் வேர்கள் வழியாய்
மிருகங்களின் வயிற்றினுள்
மனித பசிக்குமாய் உணவு சங்கிலி !
நெருப்பு காதலியின் முத்தம் என்றால்
தண்ணீர் தாயின் அன்பு வருடல் !
காற்று உணர படுவது !
நெருப்பு தெரியா படுவது !
மண் வழ படுவது !
ஆகாயம் அறிய படுவது !
நீர் மட்டுமே உண்ண படுவது !
உயிராய் எண்ணப படுவது !
நடந்தால் நீரலையாய் ,
சுழன்றால் ஆழி பேரலையாய் அபாயம் !
நீரிடம கவனம் தேவை !
மொத்தமும் நனைத்து நிஜங்கள் காட்டி விடும் !
நீர் மகள் வருகிறாள் !
வாருங்கள் கொஞ்சம் நனைவோம் !