உன் நினைவுகளுடன் நான்...
உன்னுடன் நான் சேர்ந்து இருந்த போது சோகம் எதுவுமே என்னில் இல்லை நீ பிரிந்த போது பிளந்து போனது என் இதயம்... காணும் இடம் எங்கும் கண்கள் உன்னை தேடுகின்றன வேதனை தாங்காது நெஞ்சம் எரிகின்றது நானும் நீயும் சேர்ந்து இருந்த காலத்தில் சேர்த்து வைத்த உன் நினைவுகளை மீள ஒரு முறை மீட்டிப் பார்த்தேன் வேதனை தீரவில்லை வெளியே சிரித்து உள்ளே அலுத்து வாழ்ந்து கொண்டிருகின்றேன் உன் பழைய நினைவுகளுடன்...