உதிராமல் இருக்கும் பூ

குறும்புகள் செய்வது நட்பு
கவலைகளை பகிர்வது நட்பு
சந்தோசமாய் பேசுவது நட்பு
உயிருக்கு உயிராய் இருப்பது நட்பு
மகிழ்ச்சியை அனுபவிப்பது நட்பு
மனம் விட்டு பேசுவது நட்பு
கை கொடுத்து தூக்கிவிடுவது நட்பு
நன்றி மறக்காமல் இருப்பது நட்பு
எதையும் எதிர்பார்க்காமல் செய்வது நட்பு

அன்பை பொழியும் தாயுடனும் நட்பு
அறிவை வளர்க்க செய்யும் தந்தையுடனும் நட்பு
கூடி விளையாடும் சகோதரர்களுடனும் நட்பு
உற்றார் உறவினர்களுடனும் நட்பு
தெரிந்தவர்களுடனும் நட்பு
தெரியாதவர்களுடனும் நட்பு

எல்லோரிடமும் நட்பாக இருங்கள்
நம்பிக்கையின் பலமே நட்பு

என்றுமே உதிராமல் இருக்கும் பூ
நட்பு நட்பு நட்பு

எழுதியவர் : (4-Feb-12, 1:23 am)
பார்வை : 568

மேலே