121 'டாஸ்க் பார்க்' தேர்தல்..!

சிகரங்களையே
தியானித்திருப்பதால்
மலையைக் கடக்க முடியாது!

அலைகளையே
பாராட்டிக்கொண்டிருந்தால்
கடலைக் கடக்க முடியாது!

'வாராய்! நீ! வாராய்!'
என்று உன்னைச்
சிகரங்களுக்கு அழைத்துச் செல்பவர்கள்
பள்ளத்தாக்குகளில் உன்னை
உருட்டிவிடுமுன்
விழி! ஏழு! செயல்படு!

தேர்தல் திருவிழாவில்
தொலைந்துவிடாதே !
குழந்தையாய் அழாதே!
கைகளால் தொழாதே!
கால்களில் விழாதே!
படுத்துக் கொண்டே
இரசிக்க
நெடுந்தொடர் நாடகமல்ல
தேர்தல் !

மலிந்து போன உன் மதிப்பும்,
நலிந்து போன உன் நாட்களும்
தொலைந்துபோனதாக இருக்க
விழி! ஏழு!
நெளிந்துகொண்டிருக்கும் புழுவிலிருந்து
நிமிர்ந்து எழுகின்ற மலையாக
ஏழு! செயல் படு! அல்லது செத்துமடி!
'டாஸ்மாக்' இல்லை தேர்தல்!
'டாஸ்க் பார்க்' என்று காட்டு!
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (29-Feb-12, 2:55 pm)
பார்வை : 186

மேலே