மரமாக வேண்டும் நாம்..!!
உயர உயர வளர்த்தாலும் தலைக்கனமில்லை
தழைத்து செழித்து பருத்தாலும் தளர்வுமில்லை
குளிர்காற்றால் மனதை குளிர்விக்கும்
குளிர்மழையும் இதனால் உருவாகும்
இலை தழையால் மண்ணும் செழிக்கும்
பறவைகளும் விலங்குகளும் அண்டிப்பிழைக்கும்
ஒசோனையும் காக்கும் உயிர்க்காற்றை பெருக்கும் காலங்கள் பலகடந்து பயன்கள் பலப்பல சேர்க்கும்
மனிதர்கள் நம்மைவிட மரங்களே அற்புதம்
மரமாக பிறந்து பயன்தருவோம் மறு பிறவியிலாவது..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
