சல்லடை உறவுகள் ...!
வெட்கம், மானம்,
சூடு, சொரணையென
மனச்சல்லடைகளால்
மாற்றி... மாற்றி...
சலித்து பார்த்துவிட்டேன்
சுற்றி நிற்கும்
உறவுகளையும் நட்பையும்...!
இறுதியில்
தனிமரமாய் தனித்து தவித்தது
"நான்"
மட்டுமே கனத்த இதயத்துடன் ...!
சல்லடையாய் வாழ்க்கையை
சலித்துக்கொண்டே இருந்தால்
மிச்சமாவது "நான்" மட்டும் தானே .....!
வாழ்க்கை ஓர்முறை
வாழ்வது யாருக்காக...?
"அன்பே" வாழ்க்கையென
போதிமரத்தென்றல்
செவிக்குள் சங்கு ஊத
செவி வீங்கி நிசப்தமானேன் ...!
சலித்த சல்லடைகளை
வீதியில் வீசினேன்
வீதியிலிருந்த உறவும் நட்பும்
வீட்டிற்குள் கிரகப்பிரவேசம் செய்தனர்.... ...!
பாறை இடுக்கில்
மலரும் மலர் போல .....
உதடுகளில்
புன்னகைப்பூவை
உற்பத்தி செய்ய
பழகிக்கொண்டது என் மனசு...!
பணம் என்னும் பந்தலின் கீழ்
என்னைச்சுற்றி
உறவும் நட்பும் குளிர்காய
"இளித்தவாயன்" என்ற
டாக்டர் பட்டத்தை
சூட்டி மகிழ்ந்தது ஊர்நாக்குகள் ...!