மக்கிய மலர்

எத்தனை எத்தனை
கைகள் குவிந்தன
காணும்போதெல்லாம்!

எத்தனை எத்தனை
வாய்கள் துதித்தன
வாய்க்கும் போதெல்லாம்!
அத்தனையும் எங்கே போனது?
பணிஓய்வு பெற்றப்பிறகு
அத்தனையும் எங்கே போனது?

அவர்களெல்லாம்
அப்படியேத்தான் இருக்கிறார்கள்
நான் மட்டும்தான்
மக்கிய மலராய்
மௌனித்து கிடக்கிறேன்.

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (1-Apr-12, 3:44 pm)
பார்வை : 164

மேலே