"என் ஆத்தா"

போன வருச போங்க்களுக்கு
அப்பா எடுத்து குடுத்த சேல
சும்மாடா தலயில ஏறி கொள்ள
புல்லு கட்ட தூக்கிக்கிட்டு
போன பொழுத பொலம்பிக்கிட்டு
எங்கூட எட்டி நட போட்டே
வருவாங்க எங்க ஆத்தா;

காலயில சாணி போட்டு
களாகட்ட தூக்கிக்கிட்டு
கொல்லி காட்டுக்கு போனவங்களுக்கு
கால சாப்பாடு உச்சியில;

கத்திரி வெயில கரிச்சி கொட்டி
கருத்துடுவான் புள்ளயின்னு
கண்டங்கி சேலையாலே
கருவறைக்கு மேலே கூடுகட்டி
பொத்திவச்சி பாத்துக்குவாங்க;

ஆட்ட ஓட்ட ஓடி
அங்க கிடந்த முள்ளு ஏறி
அழுதுகிட்டே நா வந்த போது
எல்லா சாமி பேரையும் சொல்லி
திட்டி பூட்டங்க.......
அதுவரைக்கும் நான் நம்பனது இல்ல
சாமியும் சாமியும்
சண்ட போட்டுக்குமின்னு...

அவசரமா ஆக்கி வடிச்சி
எனக்கு மிஞ்சினது அப்பன் மிச்சம்
அதுகூட சேத்து அடி சேறுதான்
அவுங்க வவுத்துக்கு...;

சோத்து பானைக்கு தண்ணி ஊத்தி
சோந்த என்ன மடியில போட்டு
முந்தான மோனையாள
விசிறி விடுவாங்க;

எம்மேலே
அழகா போத்தியிருக்கும
எங்கப்பான முடிஞ்ச முந்தான
எங்காத்த மடிதான்
எப்பவுமே எனக்கு தலையான;

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (2-Apr-12, 3:43 pm)
சேர்த்தது : ஆரோ
பார்வை : 196

மேலே