என் தெய்வத்தாய்..(தேவதை)
கற்கவில்லை நீ..
கற்றுக்கொண்டிருக்கிறேன் உன்னால்..
கல், மண் நீ சுமக்க..
கல்லூரியில் நான்...!
எதையும் எதிர்ப்பாக்காமல் இன்னும் சுமக்கிறாய்..
நீயே எனக்கு தெய்வம்...தாயே..!
நீ மட்டுமே என் தெய்வம்..!!!
இருநூறுக்கு வழியில்லா காலத்திலும்..
இரு சக்கர வாகனம் தந்து..
இளைப்பாற இடமின்றி இல்லல்கள் நீ பட்டு..
களைப்பரித்து இந்த கல்லை சிற்பமாகியவள் நீ..!!!
எனக்காக இன்னும் சுமக்கிறாய்
என்னையும்...! என் கண்ணீரையும்..!!
குடைபிடித்து உனை கூட்டி..
என் குருதி உள்ளவரை நான் சுமப்பேன்..
காட்டிலும் கழனி மேட்டிலும்
களைப்பிடுங்கிய உன் கைகள்..
கரம் சிவக்க கொடுத்துதவும் நாள்..
வெகு தூரமில்லை..
அதுவரை எனக்கு ஓய்வும்மில்லை...