பனித்துளி
நடுநிசிநாய்கள்
முகம் பார்த்ததால்
அதிகாலையில் உடைந்த
நிலவுக்கன்னாடி...
வெண்ணிலவு உமிழ்ந்த
ஒளிவில்லை.
ராத்திரி பெய்த
நுண்ணிய மழைக்கு
ரகசியமாய் வந்த
புல்லின் குடை.
அதிகாலை வரும்
வண்ணத்துப்பூச்சிகள்
முகம் பார்க்க
வானம் தந்த
நீர்க்கண்ணாடி .
புல்லில் பூத்த
ஈயப்பூக்கள்.
தாவரங்களில் தேனெடுக்க
விண்ணிலிருந்து
பறந்துவந்த
நீர்த்தேனீக்கள்.