சில சுவாரசியமான தகவல்கள்
----- சில சுவாரசியமான தகவல்கள் ----
மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞான காதாசிரியர் எழுதிய மிக சிறிய திகில் கதை ---> "உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்து இருந்தான். கதவு தட்டப்பட்டது."
நாம் இந்தியர்களுக்கு கடமைபட்டுவர்கள். அவர்கள் தான் கூட்டல் முறையை கண்டு பிடித்தவர்கள். அந்த கண்டுபிடிப்பு மட்டும் இல்லையென்றால் எத்தனையோ அறிவியல் முன்னேற்றம் நிகழாமல் போயிருக்கும் என்று சொன்னவர் அறிவியல் விஞ்ஞானி ஐன்ஷ்டீன்.
இரண்டாம் ரமேசஸ் என்ற பண்டைய கிரேக்க மன்னன் கிமு 1213 இல் தனது 90 வயதில் காலமானார். சிறந்த வீரன் 66 வருடங்கள் ஆட்சி புரிந்தார். இவருக்கு 111 மகன்களும் 66 மகள்களும் இருந்தனர். அபுசிம்பல் என்ற சரித்திர புகழ் பெற்ற கோவிலை கட்டியவர் இவரே.
புகழ் பெற்ற ஆங்கில கவிஞர் மில்டன் திடீரென்று பார்வை இழந்தார். ஆனாலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. அவர் புகழ் பெற்ற இலங்க்கியங்கள் அனைத்தும் அவர் பார்வையிழந்த பின் எழுதப்பட்டவை.
உலக மொழிகளிலே குறைந்த சொற்க்களை கொண்ட மொழி - டாகி. கயான நாட்டின் ஒருசில பகுதிகளில் இது பேசபடுகிறது. இம்மொழியில் வெறும் 340 சொற்கள் மட்டுமே உள்ளன.
அரபு மொழியில் வாளுக்கும் ஒட்டகத்திற்கும் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் உண்டு.
தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து கிடையாது.
மாவீரன் நெப்போலியன் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் வைத்திருந்தார். அந்த நூலகத்தில் இடம் பெற்ற ஒரு தமிழ் நூல் கம்பராமாயணம்.
மாவீரன் நெப்போலியன் பூனையை கண்டால் பயந்து நடுங்கி போய்விடுவாராம்.
நீர்யானை பன்றி வகையை சேர்ந்தது.
நீர்யானை சிந்தும் வியர்வை சிவப்பாக இருக்கும்.
நீர்யானை பிறந்ததும் ஒரு சுண்டெலியை விட சிறிதாக இருக்கும்.
நீர்யானை கொட்டாவி விட்டால் அது தன் எதிரியை கோபமுடன் தாக்க போகுது என்று அர்த்தம்.
ஜீரோ வால்ட் மின்விளக்கு - 15 வால்ட் மின்சக்தி உடையது.
அடிபட்டால் மனிதனைப் போல் அழும் தன்மையுடையது கரடி.
ஒரு ஒட்டகம் இறந்து கிடப்பதை கண்டால் மற்றொரு ஒட்டகமும் அதிர்ச்சியில் இறந்துவிடும்.
ஒட்டகம் எவ்வளவு பசியில் இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் சாப்பிடாது.
தேக்கு மரத்தையும் வேப்ப மரத்தையும் கரையான்கள் அரிக்காது.
பாலைன் மச்டர்ஸ் நெதர்லாந்து நாட்டின் பெண்மணி. இவர் காலம் 1876 - 1895. இவர்தான் உலகிலேயே மிக குள்ளமான பெண்மணி. இவர் உயரம் வெறும் 61cm தான். இன்று வரை இவரைவிட ஒரு குள்ளமான பெண்மணி இன்னும் பிறக்கவில்லை.
பாகிஸ்தானில் பிறந்த இந்திய பிரதமர் திரு மன்மோகன் சிங். இந்தியாவில் பிறந்த பாகிஸ்தான் அதிபர் திரு. பர்வேஸ் முஷாராப்.
13 அடிகள் கொண்ட நம் தேசிய கீதத்தை 52 நொடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும்.
எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு சாதனை படைத்திருக்கிறார் திரு. எரிக் வேயின். அவர் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் யாரையாவது ஏமாற்றிவிட்டால், அவர்கள் ஏமாந்துவிட்டதாக அர்த்தமில்லை. அவர்கள் உங்களை அதிகம் நம்பி இருந்தார்கள் என்று அர்த்தம்.
இதையெல்லாம் நான் அறிந்து கொள்ள உதவிய புத்தக பதிப்பகங்களுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் நன்றி.
--- தமிழ்தாசன் ---