நீ இப்படியே இரு!

நீ  இப்படியே  இரு!

பூவே!
உன் புன்னகை
புது வசந்தத்தின்
கதவுகளை என்னுள் தட்டுகிறதே!
இயந்திரமாய் இற்று போன இதயத்துக்கு ,
உன் புன்னகை
புது மருந்து தடவுகிறது!
உன் முல்லை சிரிப்பில்
கொள்ளை போனது என் மனம் தானே!
வெள்ளி நிலவே!
நீ!
சிரித்துக் கொண்டே இரு!
நாளைய
சோகங்களால்..
சுமைகளால்.. நமத்து போய்விடாமல்
என்றைக்கும்
நீ இப்படியே இரு!

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி ந� (12-Jun-12, 7:35 pm)
பார்வை : 199

மேலே