ஒப்பில்லா உழவு.

விளையாத பொட்டல்காடும்-உன்
வியர்வை பட்டால்
பொன் மணிகளாய்
வளைந்து நிற்கும்.

வயலிலே ஆறுமாத
உன் உழைப்பு
விளைந்த
முத்துக்களாய் குவிப்பு.

பாதாளம் பாயும்
பணத்தால் பலர்
தட்டுகளிலே
வெளுத்துக் கிடக்கும்
உன் உழைப்பு.

உழைத்துக் கருத்த
உன் தேகம் கண்டு
கார்மேகமும் உதிர்த்ததோ
கண்ணீரை மழைத்துளிகளாய்!!

ஏர்பிடித்த காலம் போய்
எந்திரம் உதயமானாலும்
உன் உழைப்பு
எக்காலமும் ஏற்றத்துடனே காணப்படும்.

உன் நாட்டுப்புற
பாட்டு கேட்டு
நாளும் வளருது
நாத்துக்கட்டு -நீ
நட்டு வைத்த நிலத்திலிருந்து....

நாளும் பொழுதும் நீ வளர
ஞாயிருக்கும் முன்னெழுந்து
நளினம் பொங்கும்
காலையழகை-கட்டுச்சோறு
கட்டிக் கொண்டு
கண்டு ரசித்த படி வந்திடுவார்கள்..

நாகரீகம் வளர்ந்தாலும்
நாடு முழுவதும் பரவினாலும்
உன் உழைப்பின்றி
உயிர் வாழாது- மனித இனம் .

என்றுமே ...
ஒப்பில்லாத உழவாலே!
நீங்கள் உயர்ந்திடுவீர்கள்
தரணியிலே!!

எழுதியவர் : ஹரிணிகார்த்தி (17-Jun-12, 4:56 pm)
பார்வை : 222

மேலே