காணக் கிடைத்தவை.

அந்தியின் அமைதியில்
தெரு விளக்கின் வெளிச்சத்தில்
எனக்குக் காணக் கிடைத்தவை.

கத்தித் தீர்க்க விஷயம் ஏதுமின்றி..
கால் தூக்கி நிற்கும் நாய்;
வீட்டிலிருந்து தப்பி ...
வெளியே புழு கொத்தும் கோழி;
வளரும் இடம் குறித்த
பிரக்ஞையற்று ...
வளரும் புல்;
மின்கம்பியில் ஊஞ்சலாடி...
இறந்த காகம்;
மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட
மனிதன்;
மற்றும்....

தன்னை நிராகரித்துக் கொண்ட
கடவுள்.

எழுதியவர் : rameshalam (4-Jul-12, 4:53 pm)
பார்வை : 203

மேலே