"செய்த குற்றங்கள்..."

"செய்த குற்றங்கள்..."
வளரும் தளிர்களைவிட
உதிரும் இலைகளே
உரமாகும்....
மிதக்கும் மேகங்களைவிட
விழுந்த நீர்த்துளிகளே
பசுமையை படரவிடும்...
மெளநக காற்றைவிட
தழுவிடும் தென்றலே
இதம் பரப்பிடும்...
கண்ட வெற்றியைவிட
செய்த குற்றங்களே
அனுபவப் பாடமாகும்...
தோன்றும் எண்ணத்தைவிட
எடுக்கும் முயற்ச்சிகளே
வெற்றியடையச் செய்திடும்...
நாளைய எதிர்பார்ப்பைவிட
நேற்றைய சிரிப்பொழியே
நம் நட்பை நினைவூட்டும்...