அவசரம்

என் நண்பனே!
அதிகாலை பனிகாற்றின் அமைதியில்
ஆழ்நிலை தியானம் சென்றாயோ!
கதிரவன் ஒளிபடலம் வீசிடும்முன்னே
இருளின் போர்வையில் கண் அயர்ந்தயோ!
கருமேகம் பெற்றெடுத்த மின்னலாய்
கணநொடி பொழுதில் மறைந்தாயோ!
சுடரினால் கரைந்திடும் மெழுகாய்
உன்தாய் உருகிட வஞ்சிதாயோ!
அண்டத்தின் நட்சத்திர கூட்டத்தினூடே
ஓரணுவாய் நீசென்று மறைந்தாயோ!
ஒலிவேகம் காண அதிவேகம்சென்று
ஒளிவேகத்தில் உன் உயிர் பிரிந்தாயோ!
என் நண்பனே என் செய்வேன் நான்!!!!

எழுதியவர் : சிவகுமார். ந - பவானி (13-Jul-12, 12:53 pm)
சேர்த்தது : சிவக்குமார்
பார்வை : 299

மேலே