காதல் வந்தால்!!!

பார்த்த நொடிப்பொழுதில்
பார் உன்னைச் சுற்ற ஆரம்பிக்கும்!
அதுவரை துடித்துக்கொண்டிருந்த இதயம்
மௌனத்தில் சில நிமிடங்கள் வாழ்ந்திடும்!
அவளை பார்த்ததும்...
அவசரம் என்பது உன்னுள் அதிகமாகும்
அவள் உன்னை ஒன்று கேட்டால்...
சிரிப்பென்பது உனக்கே சொந்தமானது
போல் சிரித்துக்கொண்டிருப்பாய்
ஒரு காரணம் அறியாமலே...
பார்க்கும் பெண்களெல்லாம் அழகு
என தோன்றிய உன் மனதுக்கு...
இவள் மட்டுமே அழகென்று தோன்றும்...
வீசும் காற்றில் கூட வியர்வை
உருவாகும் உன் மெய்யில்..
அவள் உன்னை நெருங்கும் போது...
மறதி எனும் நோய் உன்னை தாக்கும்
அவளைப் பற்றிய நினைவுகளால்...
உன் கைளுக்குள் பேனா குடிபுகும்
புதுக்கவிதைகள் எழுதிட அவளைப் பற்றி...
உன் காலங்கள் செலவழியும்,
அவள் உன்னை கடந்து போகின்ற
நொடிகளுக்காக காத்திருந்தே
தூக்கத்தை துறந்தவனுக்கு
துயில்கொள்ள மட்டும் மறவாது
அதிகாலையில் அவளைக் காண...
பசியென்ற ஏக்கம் உனக்கிருக்காது
அவள் உண்ண நீ பார்த்திருந்தால்!
வலியென்ற உணர்வறியாது உடல்
வாங்கும் அடிகள் அவளுக்காக என்றால்!
உயிரென்ற ஒன்று
உன்னிடத்தில் இருக்காது!
வெறும் உடல் கொண்டு வாழ்வாய்
இந்த காதல் வந்தால்.....!!!!!