எனக்காகவே நீ
நான் சாப்பிடவில்லையா?
எனக்கு மருந்து
தேவையா?
என்னிடம் நல்ல ஆடைகள் இல்லையா?
மழையில் நான் நனைகிறேனா?
நாடு விட்டு நாடு நான் செல்ல வேண்டுமா?
என் தொடர்பான
எதை பற்றியும் நான் ஏன்
கவலை பட வேண்டும்?
என் உயிரோடு ஒன்றி விட்ட
நீ எனக்காகவே இருக்கும் போது?