மரணமே வா எனக்கொரு முத்தம் தா !!
![](https://eluthu.com/images/loading.gif)
அவள் கண்களால்
தீண்டப்படும்போதுதான்
உலக உருண்டை - எனக்கு
தீண்டத்தகாததாகிறது !
உட்சுவாசத்துடன்
உயிர்பிரிய வேண்டும் எனக்கு !
என் கடைசிச் சொட்டு
மூச்சுக் காற்றிலும்
அவள் கலந்திருப்பாள் என்பதால் !
வில்லை உடைத்தெறிந்ததால்
காதல் பூத்தது சீதைக்கு !
அவளின் வில்லாய் நெளியும் புருவத்தால்
என் மனமென்னும் வனத்துள்
உடைத்து உள்ளே புகுந்ததால்
நான் ராமனாணேன் !
அவள் புருவம்
செரித்த எச்சம் தானே,
நீங்களெல்லாம்
பார்க்கும் என் உருவம்...!
தீயில்லாமல்
வெந்து போகிறேன்,
அவள் விழிகளால் - நான்
விழுங்கப்படாத போது !
கம்பியில்லா தகவல் தொடர்பு..
என் கண்களில் கருவாகும்
எண்ணங்கள் - அவள்
உதடுகளில் உட்காரும்...!
உன் ஆட்காட்டி விரல்
உதிர்த்த உதிரம்
உதிராமல் தடுக்க
என் செவ்வாய் ஏந்தி
உறிஞ்சிய பொழுதுகளில்
நம் முதல் திருமணம் முடிந்தாயிற்று !
என் எல்லா ரணத்துக்கும்
மருந்தாய் இருந்தாள்..!
அவளால்தான் ரணமேயெனில்
மரணம் தவிர்த்து மருந்தேது !
வருவது எதுவாயினும்
தருவது அவளெனில் சுகமே...!
மரணமே வா எனக்கொரு முத்தம் தா !!
- வினோதன்