என் அம்மா...என் ஆசை அம்மா??
நான் உருவாகி...
ஒரு மாதம் ஆனதே என் அம்மா...
என் இதயம் உருவாகி...
உன் இதய ஓசை கேட்டதே ..என் அம்மா...
உன் இதய துடிப்பே...உன்..
முதல்.. தாலாட்டாய் அம்மா..
இருட்டாக இருந்தாலும்...
நீ இருக்க பயமேனம்மா ...
இரு மாதம் ஆனதே ..
என் கைகள் முளைக்குதே ...
உன் கன்னம் தாங்கி...
முத்தமிட நினைக்கிறன் ..
சிறு கை..போதலையே...என் அம்மா...
மூன்று மாதம்..ஆனதே ..
என் கால்கள் முளைத்ததே ...
நீ எனை தடவி குடுக்கவே...
உன்னை செல்லமாய்....
உதைக்கிறேன் என் அம்மா...
நீ பாட நான் தூங்குவேனம்மா...
உனக்காக நீ சாப்பிட மறந்தாலும்..
எனக்காக..சாப்பிடுவாயே ..அம்மா..
உன்...தங்க..முகம்..பார்க்க...
ஆசையாய்...நான் அம்மா...
என் பட்டுகன்னம்...நீ தொட்டுவிட...
ஆசை...என் அம்மா....
என்...பிஞ்சு..விரல் நீ பிடிக்க...
ஆசை என் அம்மா ..
நான்கு மாதம்..போனதே தெரியலையே என் அம்மா...
இன்று..நான் ...ஆணா ..பெண்ணா
தெரிந்திடுமே... என்..ஆசை ..அம்மா....
யாரோ...நான் பெண் என்கிறார்கள்..
ஆசை முத்தம் தாராயோ...என் அம்மா...
அம்மா...என்னை யாரோ...
வெளியே வர செய்கிறார்கள்...என் அம்மா...
என்னை..சீக்கிரம்..பார்க்க ஆசையா என் அம்மா...
ஐயோ ...ஏன் கால்கள்..வெட்டபட்டன....
ஐயோ...என் கைகள்...வெட்டபட்டன..அம்மா...
என்ன பாவம் செய்தேன் ...அம்மா
பெண் .பிள்ளை..பிடிக்காதா?...என் அம்மா...
யார் சொல்லி அம்மா...
என்னை...கொன்றாய் என் அம்மா..
நான் செய்த பாவம் தான் என்ன அம்மா..
இனி ஒரு ஜென்மம் எடுத்தால் ...
உன் பிள்ளையாவே...பிறப்பேன் ..அம்மா...
அப்போது..உனக்கு பிடித்த
பிள்ளையாய் பிறப்பேன்..அம்மா..
என் அம்ம்மாஆ ....