இது நம் மழைக்காலம்

இது நம் மழைக்காலம்

இது நம் மழைக்காலம்-ஏனென்றால்
என்னைப்போலவே நீயும் எங்கோ
நனைந்துக்கொண்டிருகிறாய்!
சட்டென்று விழுந்தது மழைத்துளி உதட்டில்-
உணர்ந்தேன் உன் முத்ததை!
நனைந்த ஆடைகள் இறுக்கிப்பிடித்துக்கொண்டு
ஞாபகப்படுத்துகின்றன உன் அணைப்பை!
மண் வாசனையைவிட சுகமானது
உன் வாசனை!
தூறல் நின்றபிறகும் பூக்களிலிருந்து
வழிகின்றன வாச நினைவுகள்!
என்னருகே வர ஒரு குடைமட்டும் என்னிடம்-
உருண்டு வழியும் மழைத்துளிகள் வாழ்த்தட்டும்
நம் காதலை!


Original source: http://www.eegarai.net/t48571-topic#ixzz23n8fpqoo

எழுதியவர் : sivaganga (17-Aug-12, 2:28 pm)
சேர்த்தது : sivaganga
பார்வை : 156

மேலே