குரள் காணா நட்பு

குரள் காணா நட்பு

விதி தந்த நட்பிது..
வினாடியில் விலகாது..!

நெஞ்சில் நுழைந்த நட்பிது..
நிமிடதில் நீங்காது..!

மனதை மலர்வித நட்பிது..
மணிக்கணகில் மறையாது..!

நேசம் நிறைந்த நட்பிது..
நாட்களானால் நெகிழாது..!

உள்ளம் விரும்பிய நட்பிது..
வருடங்கள் பலவாயினும்..
வாடது.. வயதாகாது..!

கணவிலும் கண்ட நட்பிது..
காலத்தால் என்றும் களையாது..!

பிரியமுடன் பகிர்ந்த நட்பிது..
பிரிவு வந்திடினும் பிரியாது..!

புன்னகையில் பூத்த நட்பிது..
புயலேவந்திடினும் பிளவாது..!

விட்டுகொடுத்து வளர்த்த நட்பிது..
உயிர் விடும் பொதும் விட்டுபொகாது..!

இறைவன் இயற்றிய நட்பிது..
இறந்த பின்னும் இறவாது..! :)

என்றும் நட்புடன்,
கவிதா

எழுதியவர் : கவிதா சத்யா (25-Aug-12, 12:21 pm)
பார்வை : 447

மேலே