பஞ்ச பூதம்
நான் பிறக்க வேண்டும்
நெருப்பாய் தீமைகளை அழிக்க
நான் ஓடிட வேண்டும்
வற்றாத ஜீவநதி போல
என் வாழ்கையில் தேங்கி விடாமல்
நான் காற்றை போல்
தென்றலாய் விச வேண்டும்
பிறருக்கு உதவிட
நான் கடல் அலை போல்
ஆர்ப்பரிக்க வேண்டும்
தீமைகளை எதிர்த்து
சுனாமி போல் வெகுண்டு
வர வேண்டும்
கொடுமைகளை களைய
என்னுள் நான் பஞ்ச பூதமாய்