"வாழ்த்தலாம் வாங்க....{ என் அக்கா "வளர்மதி" யை 31/08/2012 }"

நாள்காட்டி எல்லாம்
நாட் கணக்கில் தவம் கிடக்கின்றன
நீ பிறந்த நாளன்று
நாம் பிறக்கவில்லையென்று..!

உள்ளமெல்லாம் கலகம்,
விழங்க முடியா உலகம்,
என்ன செய்தாலும் கேள்வி,
எதை செய்தாலும் தோல்வி,

கள்ளமில்லா உள்ளத்தோடு
கனிவாக நீ வந்தாய்
கடவுளே தரமுடியா
பொன்வாழ்வதை நீ தந்தாய்..!

நீ பிறந்த தேதிக்கு வெறும்
வாழ்த்து சேதி போதாது,
ஆனாலும் என் மனம் உன்னை
வாழ்த்தாமல் போகாது..,

தொலைத்து விட்ட இவ்வாழ்கையும் சரி,
இனி தொலைய போகும் இல்வாழ்க்கையும் சரி,
நீ என் உடன் இருந்து நல் ஆசி புரி..!

முயற்சி செய்யாமல் முடங்கி கிடந்தது
வாழ்வில் தோல்வியை தழுவுவது சிலர் விதியே,
அக்கூட்டத்தில் ஒருவனாய் இருந்த
என்னை திரும்ப வைத்த, திருந்த வைத்த
என் அன்பு அக்கா "வளர்மதி" யே

உனக்கான இந்த வாழ்த்து கவிதை
சின்ன தாய் சொன்னாலும்
என் "சின்னத்தாய்" நீ என்று
பெரிதாய் சொல்வேன்..!

அன்புள்ளம் கொண்ட அக்கா வளர்மதிக்கு
உங்கள் அன்பு தம்பிகளின் அன்பு வாழ்த்துகளோடும்,
எழுத்துலக நண்பர்களோடும் வாழ்த்துகிறேன்,

வாழ்க! வளமுடன்!

அன்பு வாழ்த்துகளுடன்...
ஈஸ்வரன்+நா.சதிஷ்குமார்...
{ தனிக்காட்டு ராஜா + தனிக்கட்டை ராஜா }

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (31-Aug-12, 4:37 pm)
பார்வை : 865

மேலே