காதலியா மங்கையா 555
பெண்ணே.....
என்னவளாக இருந்து
நீ எனக்கு கண்ணீரை
மட்டும் தந்தாய்...
அன்று...
என் மங்கையாக இருந்து
சந்தோசங்களை மட்டும்
தருகிறாய்...
இன்று...
காதலி உனக்கும் எனக்கும்
இருந்த உறவு...
அன்று...
விரலும் நகமும் போல...
மங்கை உனக்கும் எனக்கும்
உள்ள உறவு...
இன்று...
உடலும் உயிரும் போல்...
காதலியா...?
மங்கையா...?
மங்கையான காதலியே...
என்றும் நாம்.....