இந்த இரவுக்குள் !

எப்படியும் படித்து முடித்துவிடுவேன்
கடிதத்தை
இந்த இரவுக்குள்

எப்படியும் தேடிவிடுவேன்
தொலைந்ததை
இந்த இரவுக்குள்

எப்படியும் மறுபடியும் பிறந்து விடுவேன்
இந்த இரவுக்குள்

எப்படியும் கடைசியாக ஒரு முறை சிரித்து விடுவேன் இந்த இரவுக்குள்

எப்படியும் ஒரு முறையாவது பார்த்துவிடுவேன்
இந்த இரவுக்குள்

எப்படியும் என் காதலை
முடித்துவிடுவேன் இந்த இரவுக்குள்


நாளை அவளுக்கு திருமணமாம் !!!!

எழுதியவர் : வேலு (12-Sep-12, 7:32 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 282

மேலே