துளிகள் துளிகளாய் – கே.எஸ்.கலை
உயிர் வளர்க்கும்
உடலுள் சிவப்பாறு
உதிரத் துளி !
•
சோகம் கழுவும்
விழி வழி அருவி
கண்ணீர்த் துளி !
•
உழைப்பாளிக்கு
உடல் தெளிக்கும் பன்னீர்
வியவைத் துளி !
•
இலைகளில்
இறைவனின் நீர் கோலம்
பனித் துளி !
•
கோடி மைல் தாண்டி வந்து
கோடை தீர்க்கும் கொடையாளி
மழைத் துளி !
•
என்னில் எதுவும் இல்லை
நான் இன்றி எதுவும் இல்லை
நீர்த் துளி !
(தோழி புலமி அம்பிகாவுடன் ஒரு கூட்டு முயற்சி...ஹைக்கூ தொகுப்பு)