அட கர்நாடகாவிலும் பொங்குதமிழ்!

எமது நிலம் எமக்கு வேண்டும்
என்று யாழில் பொங்கிய தமிழாக
தமிழன் பரந்து வாழும் பூமி
எல்லாம் பரவியது பொங்கு தமிழ்.

விடியல் வேண்டும் என்றும்
ஊரோடு வாழும் வாழ்க்கை வேண்டும்
என்று உரக்க கத்திய தமிழனுக்கு
உலகம் என்னதான் செய்தது.

உலகம் அங்கிகரித்த கொசோவாவும்
அங்கிகரிக்காத ஈழமும்,
ஆழத்துடிக்கும் தமிழினத்தின்
ஈழக்கனவு பலித்திடவேண்டும்.
பள்ளிகொள்ளும் மா வீரர்களே துணை!

மன்னாருக்கு பக்கத்தில் மகரஷ;ரா இருந்திருந்தால்
ஈழம் கிடைத்திருக்கும்.
சிங்களவனிடம் அடிவாங்கிய மாநிலமாய்
மகரஷ;ரா இருந்திருக்கா..
தமிழன் என்ற நாமம் மாநிலமாய்
இருந்ததால் தான் இன்று தமிழனுக்கு
நாடில்லை..

நாடில்லா தமிழர் உலக கதவினை தட்டியும்
என்னதான் ஈழத்தமிழனுக்கு கிடைத்தது.
கிரோசிமா குண்டுகளின் எச்சங்கள் தான்
இன்று தமிழனின் மிச்சங்களாக கிடக்கு.

நாடு நாடாய் பொங்கிய ஈழத்தமிழன்
இன்று nஐனிவாவில் பொங்கினான்.
காதிருந்தும் செவிடர்களான வல்லரசுகள்.
கண்ணிருந்தும் குருடர்களாக்கியது தமிழர்களை!

சேர்பியாவில் பிரிந்ததுதான் கொசோவா
சிங்களத்திடம் பிரிந்துதான் ஈழம் கேட்கிறோம்.
வாக்கெடுத்து பார் தமிழன் வாய்மை மெய்குமெடா..
ஐ.நாவின் கதவினை தட்டியே இன்று
பொங்கினார்கள் பொங்குதமிழ்.
கர்நாடகாவிலும் பொங்கவுள்ளார்கள்
ஈழத் தமிழனுக்காய் பொங்கு தமிழ்.

கர்நாடகா தமிழர்களே பொங்குங்கள்
பொங்குங்கள் ஈழத் தமிழனுக்காய் பொங்குங்கள்.
சங்கெடுத்து ஊதி சத்தமிடுங்கள்
செவிடன்களாக நடிக்கும் இந்திக் காரர்களின்
செவிப்பறை வெடிக்கட்டும்.
தமிழர் வாழும் தமிழ் நாடெங்கும் பரவட்டும்
கர்நாடகா பொங்கு தமிழுக்கு
தமிழ் நாட்டில் வெடிக்கிறது -மக்கள் முழக்கம்
இல்லை அது பொங்கு தமிழின்
எழுச்சி முழக்கம்.
முழங்கட்டும் முழங்கட்டும் சிங்கள எதிர்ப்புடன்
முழங்கட்டும்.
கலக்கம் கண்ட காங்கிரசுடன் கலங்கட்டும்
சிங்களவன்.
விளக்கம் கொண்ட மனிதர்களாக
பொங்கிஎழுங்கள் பொங்கு தமிழுக்காக..
பொங்கு தமிழால் பொங்கி தடைகளை
அகற்றி படையுங்கள் தமிழீழத்தை..

செ.அந்தணன்.

எழுதியவர் : Anthanan (22-Sep-12, 10:22 pm)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 168

மேலே