நண்பா சீக்கிரம் வா !
நண்பா சீக்கிரம் வா !
உன்னை எண்ணி அழுகையில்
கண்ணீரும் அழுகிறது
உன்னை எண்ணி நண்பா!
மகிழ்ச்சியை பகிர நீ இங்கு இல்லை!
எனவே
மகிழ்ச்சியே மகிழ்ச்சியாய் இல்லை !
நண்பா சீக்கிரம் வா !
அடர்ந்த காட்டில் அலைந்த
நாட்கள் நினைவிருக்கா...
அங்கு தேனழித்து
நாம் சுவைத்த அந்த இடம் நினைவிருக்கா..
கற்றாழை செடியில்
காதலி பெயர் எழுதுணோமே
நினைவிருக்கா..
உன் காதலி யாரென்று
நான் கேட்டேன்..
நீயும் சொன்னாய்...
நம் நட்பின் வலிமையை
புரிந்து கொண்டேன்..
நான் நினைத்ததை
நீயும் நினைத்ததால்!
நமக்குள் சண்டை என்றால்
சமாதான கடிதம் உன்னை தேடிவரும்!
நமக்கு தென்றலும் தூதாய் ஓடிவரும்!
நிலவும் நம் நட்பை நாடிவரும்!
காலத்தின் சூழ்நிலை
நாம் பிரிந்தோம்!
நம் நட்பு வளர்ந்தது!
மனம் துடிக்கிறது
உன்னை காண!
நண்பா சீக்கிரம் வா !