துக்கம்

அமைதியான மாலை பொழுதையும்,
அயல்வீட்டு வாண்டின் சிரிப்பையும்
ரசிக்க முடியாமல் அல்லாடுகிறேன்.
பலநாள் நச்சரிப்பின் பலனாம்
பரிசுப்பொருளையும்
கொண்டாட முடியாது தவிக்கிறேன் ,
ச்சே !!!,
வாழ்வில் அனைத்தையும் ருசிக்க துடிக்கும்
எனக்கு
இப்படியொரு வேதனையா !!!
என் வாழ்வை செம்மை செய்ய வேண்டும்.
நண்பர்களே ! விலகி ஓடுங்கள் !
துக்கங்களே இல்லை என்ற என் துக்கத்தை
போக்கவேணும்
விலகி ஓடுங்கள் என்னை விட்டு .....!!!!

எழுதியவர் : அ.ஸ்வின்டன் பர்நாந்த்து (24-Sep-12, 8:53 pm)
சேர்த்தது : swinton
Tanglish : thukkam
பார்வை : 188

மேலே