வழியில்லாத வலி

பாதைகள் எல்லாம் பாதியில் நின்றுவிட்டன.
பயணங்கள் யாவும் முடிவதாக இல்லை
ஆனாலும் முடித்தே ஆக வேண்டும்
போடப்பட்ட பாதைகளைத் தேடினேன்
பாதைகள் யாவற்றையும் சமுத்திரங்கள்
விலைக்கு வாங்கி பராமரிப்பதாக
அரச பத்திரிகைகள் செய்திகள் பரப்பின.
வழி தேடும் உலகில் வலிகள் மட்டுமே மிச்சமாகிறது.
வாழ விரும்பிய மனிதர்கள் சாகத் துடிக்கின்றனர்.
செத்த மனிதர்கள் போராட நினைத்தால் மட்டுமே
வாழ்வுக்கான வசந்தமும் அரசியல் புதிய யாப்பும் கிடைக்கப்பெறும்.

எழுதியவர் : imam (29-Sep-12, 8:52 am)
சேர்த்தது : myimamdeen
பார்வை : 259

மேலே